நியூயார்க்கில் இருந்து விமானம் மூலம் மும்பை வந்த இளைஞருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி.!
நியூ யார்க்கில் இருந்து விமானம் மூலம் மும்பை வந்த இளைஞருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது.
29 வயதான அந்த இளைஞருக்கு அறிகுறி ஏதும் இல்லாத நிலையில், அவர் மூன்று டோஸ் ஃபைசர் தடுப்பூசி செலுத்தியிருப்பதாகவும் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த இருவருக்கு பாதிப்பு இல்லை என்றும் மும்பை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுவரை மகாராஷ்டிராவில் மொத்த ஒமிக்ரான் பாதிப்பு 40 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments