உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதிக் கட்சியின் தேசியச் செயலாளர், மனோஜ் யாதவுக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை.!

0 2358

உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதிக் கட்சியின் தேசியச் செயலாளர் வீட்டிலும், அகிலேசின் நண்பரான மனோஜ் யாதவுக்குச் சொந்தமான இடங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

மாவு என்னுமிடத்தில் சமாஜ்வாதிக் கட்சித் தேசியச் செயலாளர் ராஜீவ் ராய் வீட்டில் இன்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

இதேபோல் மைன்புரியில் அகிலேசின் நண்பரும் ஆர்சிஎல் வணிகக் குழுமத்தின் உரிமையாளருமான மனோஜ் யாதவ் வீட்டிலும், அவருக்குச் சொந்தமான பல்வேறு இடங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments