புதுக்கோட்டை மாவட்டத்தில் 100 பள்ளி கட்டிடங்களை இடிக்க உத்தரவு..

0 8663
புதுக்கோட்டை மாவட்டத்தில் சிதலமடைந்த மற்றும் ஆபத்தான நிலையில் உள்ள 100 பள்ளி கட்டிடங்களை இடிக்க அம்மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு உத்தரவிட்டுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் சிதலமடைந்த மற்றும் ஆபத்தான நிலையில் உள்ள 100 பள்ளி கட்டிடங்களை இடிக்க அம்மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு உத்தரவிட்டுள்ளார். 

ஆபத்தான நிலையில் உள்ள பள்ளிக் கட்டிடங்கள் குறித்த விவரங்களை புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர், மாவட்ட நிர்வாகத்திற்கு அளித்துள்ளார். அதனடிப்படையில், தற்போது 100 கட்டிடங்களை இடிக்க புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு உத்தரவிட்டுள்ளார்.

துரை மாவட்டத்தில் சேதமடைந்த  நிலையில் உள்ள 200 பள்ளி கட்டிடங்கள் அடையாளம் காணப்பட்டு அதனை இடிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் தகவல் தெரிவித்துள்ளார். அதில் 120 வகுப்பறை கட்டிடங்களும்,  80 கழிவறை கட்டிடங்களும் சேதமடைந்த நிலையில் உள்ளதாக கூறியுள்ளார்.

சேதமடைந்த கட்டிடங்களுக்குள் மாணவர்கள் செல்லாத வகையில் முன்னதாக கண்காணிக்கப்பட்டு வந்ததாகவும், தற்பொழுது முழுமையாக இடிக்க உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments