தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை நிறைவேற்ற நிதிப் பற்றாக்குறை இல்லை - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

0 2874
தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை நிறைவேற்ற நிதிப் பற்றாக்குறை இல்லை என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை நிறைவேற்ற நிதிப் பற்றாக்குறை இல்லை என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

மும்பையில் நெடுஞ்சாலை, போக்குவரத்துத் திட்டங்களுக்கான முதலீட்டு வாய்ப்புக் குறித்த மாநாட்டில் பேசிய அவர், 26 பசுமை விரைவு நெடுஞ்சாலைத் திட்டங்கள், குகைப் பாதைத் திட்டங்களை இரண்டு இலட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தி வருவதாகத் தெரிவித்தார். அதற்குத் தேவையான நிதி சுங்கக் கட்டண வருவாயிலிருந்து கிடைப்பதாகக் குறிப்பிட்டார்.

பலவகை எரிபொருளால் இயங்கும் எஞ்சின்களைத் தயாரிக்கும்படி வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு விரைவில் சுற்றறிக்கை அனுப்பப்படும் எனத் தெரிவித்தார்.

டொயோட்டா, சுசுகி, ஹுண்டாய் ஆகிய நிறுவனங்கள் பலவகை எரிபொருளால் இயங்கும் எஞ்சின் தயாரிப்பை அதிகப்படுத்துவதாக உறுதியளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments