கரூரில் வடிகால்வாய் பிரச்சினை, மின்வாரிய ஊழியரை கல்லால் அடித்து கொலை செய்த இருவர்

0 2900

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே, வடிகால்வாய் பிரச்சினை காரணமாக மின்வாரிய ஊழியரை, கல்லால் அடித்து கொலை செய்த இருவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், ஒருவரை கைது செய்தனர்.

அய்யர்மலை பகுதியை சேர்ந்த மின்வாரிய ஊழியரான மாணிக்கவாசகம் அப்பகுதியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவருக்கும், முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில், கோபாலகிருஷ்ணன் மற்றும் அவனது தாய் இருவரும், மாணிக்கவாசகத்தை தகாத வார்த்தைகள் பேசி திட்டியதாகவும், கல்லை எடுத்து அவர் தலையில் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

படுகாயமடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments