சிவகங்கையில் மணல் திருட்டில் ஈடுபட்டவர்களை கண்டித்த, வி.ஏ.ஓ மீது தாக்குதல்
சிவகங்கை மாவட்டம் பெரும்பச்சேரியில், சட்டவிரோதமாக மணல் திருட்டில் ஈடுபட்டவர்கள் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்த வி.ஏ.ஓ தாக்கப்பட்டார்.
பெரும்பச்சேரி, வைகை ஆற்று பகுதியில், இளமனூரைச் சேர்ந்த சுந்தரபாண்டி டிராக்டர் மூலம் மணல் கடத்துவதாக, கிராம நிர்வாக அலுவலருக்கு அப்பகுதி மக்கள் புகார் அளித்தனர். விரைந்து வந்த வி.ஏ.ஓ மணிவண்ணன், காவல்துறைக்கு அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் டிராக்டரை பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில், வி.ஏ.ஓ தனியாக சென்ற போது வழிமறித்த மணல் திருடிய கும்பல் தாக்கியதாக கூறப்படுகிறது. தாக்கியவர்கள் மீது வி.ஏ.ஓ கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments