வடக்கு கேமரூனில் தண்ணீருக்காக நடந்த மோதல்.. 44 பேர் படுகொலை.. 1 லட்சம் பேர் அண்டை நாடுகளில் தஞ்சம்..
வடக்கு கேமரூனில் தண்ணீருக்காக இரு தரப்பினர் மோதிக் கொண்டதில் ஏறத்தாழ 1 லட்சம் மக்கள் அகதிகளாக மாறிய அவலம் நிகழ்ந்துள்ளதாக ஐ.நா.வின் அகதிகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தண்ணீருக்காக கால்நடை வளர்ப்பாளர்கள், விவசாயிகள் மோதிக் கொண்டதில் 44 பேர் படுகொலை செய்யப்பட்டும், நூற்றுக்குமேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொடர் போராட்டங்களால் வாழ்வாதாரம் இழந்த மக்கள், உயிரை காத்துக்குள்ள அண்டை நாடான சாட்டில் (Chad) தஞ்சமடைந்து வருவதாகவும் அதனால் தங்குமிடம், போர்வை, படுக்கைகள், சுகாதார கருவிகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Comments