மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளுக்கு இதுவரை ரூ.7.35 கோடி நிதி ஒதுக்கீடு - மத்திய அரசு

0 3502
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளுக்காக இதுவரை 7கோடியே 35 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளுக்காக இதுவரை 7கோடியே 35 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளுக்காக பிரதமரின் சுகாதார பாதுகாப்பு திட்ட நிதியில் இருந்து விடுவிக்கப்பட்ட தொகை பற்றிய விவரங்கள் மக்களவையில் கேள்வியாக கேட்கப்பட்டது.

இதற்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்து பேசிய மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவின் பவார், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கடந்த 2019-2020-ம் ஆண்டு 3கோடியே 12 லட்ச ரூபாயும், 2020-2021-ம் ஆண்டு 4கோடியே 23 லட்சம் ரூபாயும் விடுவிக்கப்பட்டு இருக்கிறது என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments