ஒமிக்ரான் வைரசுக்கு எதிராக ஸ்புட்னிக் லைட் செயலாற்றும் - ரஷ்ய அதிபர் புதின்
ஸ்புட்னிக் தடுப்பு மருந்து ஒமிக்ரான் வைரசுக்கு எதிராக செயலாற்றும் திறன் கொண்டுள்ளதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.
ஒமிக்ரான் வைரசுக்கு எதிரான ஆன்டிபாடிகளை உடலில் பெருக்கும் திறன் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய ஸ்புட்னிக் லைட் தடுப்பூசிக்கு இருப்பது ஆய்வக முடிவுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகளை உலக நாடுகளுக்கு சப்ளை செய்ய ரஷ்யா தயாராக இருப்பதாக புதின் தெரிவித்தார்.
Comments