மாணவியை கொன்று மூட்டையில் கட்டிய தாயின் சகவாச தோசம்..! இது கொடுமையிலும் கொடுமை

0 6255
மாணவியை கொன்று மூட்டையில் கட்டிய தாயின் சகவாச தோசம்..! இது கொடுமையிலும் கொடுமை

கோவையில் மாணவியை கொலை செய்து சடலத்தை சாக்கு மூட்டையில் கட்டி வீசிய சம்பவம் தொடர்பாக, தாயின் தவறான சகவாச காதலனை போலீசார் கைது செய்துள்ளனர். நகை தருவதாக வீட்டிற்கு அழைத்துச்சென்று மாணவியிடம் அத்துமீறிய பாலியல் அரக்கனின் கொடூர செயல் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

கோவை சரவணம்பட்டி அடுத்த சிவானந்தபுரத்தில் கை,கால்கள் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட 10 ஆம் வகுப்பு மாணவியின் சடலம் அடையாளம் காணப்பட்ட நிலையில், அந்த சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் கோவை புளியகுளம் அனைத்து மகளிர் போலீசார் போலீசார் வழக்கு பதிந்து விசாரணையை முன்னெடுத்தனர்.

சாக்கு மூட்டையில் சடலமாக மீட்கப்பட்ட மாணவியின் கை, கால்கள் கயிற்றால் கட்டப்பட்டும், வாயில் துணி வைத்து அடைக்கப்பட்டும் இருந்ததால் மாணவி கொலை செய்யப்பட்டதாக வழக்கு பதிவு செய்து கொலையாளியை தேடி வந்தனர். மாணவியின் செல்போனை கைப்பற்றிய போலீசார் அதில், அவர் யாருக்கெல்லாம் போன் செய்துள்ளார், அவருடன் கடைசியாக பேசியவர்கள் யார் ? யார்? என்ற தகவல்களை சேகரித்தனர்.

அப்போது சம்பந்தப்பட்ட மாணவி, மாயமான நாளன்று கடைசியாக அவரது வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்லும் கட்டித் தொழிலாளியான முத்து குமார் என்பவரிடம் பேசியது தெரியவந்தது. இதையடுத்து சந்தேகத்தின் பேரில் போலீசார், அவரை பிடித்து விசாரித்த போது மாணவி கொலைக்கான மர்மம் விலகியது.

கணவரை பிரிந்து வாழும் மாணவியின் தாய்க்கும், 44 வயதான கட்டிட தொழிலாளியான முத்துக்குமாருக்கும், 3 வருடமாக தவறான சகவாசம் இருந்துள்ளது. இருவரும் கட்டிட வேலைக்கு ஒன்றாக சென்றுவருவதால் கணவன், மனைவி போல குடித்தனம் நடத்தி வந்துள்ளனர். அக்கம்பக்கத்தினரிடம் முத்துக்குமாரை குடும்ப நண்பர் என்று கூறி சமாளித்துள்ளார்.

இந்த நிலையில் மாணவியின் தாய், பழுதான தனது இரண்டரை சவரன் தங்க நகையை கொடுத்து முத்துகுமாரிடம் சரி செய்து தர கேட்டுள்ளார். அதனை பெற்றுச்சென்ற முத்துக்குமார் நீண்ட நாட்களாக திருப்பிக் கொடுக்கவில்லை. மேலும் சீட்டு பணம் 40 ஆயிரம் ரூபாய் பணத்தையும் செலவழித்து விட்டு திருப்பி கொடுக்க வில்லை என்று கூறப்படுகின்றது. இதனால் அவர்களுக்கிடையேயான உறவில் விரிசல் விழும் நிலை ஏற்பட்டுள்ளது.

மாணவியின் தாய் ஊருக்கு சென்ற நிலையில் , வீட்டில் தனியாக இருந்த மாணவி மீது முத்துக்குமாரின் தவறான பார்வை விழுந்துள்ளது. இதையடுத்து மாணவியை வளைக்க திட்டமிட்ட முத்துக்குமார், இரண்டரை சவரன் தங்க நகை தனது வீட்டில் தான் உள்ளது, அதனை கண்டிப்பாக தந்து விடுகின்றேன், அம்மாவுக்கு போன் செய்து நான் நகையை திருப்பி தந்து விட்டதாக கூறும் படி கெஞ்சியுள்ளான். முத்துக்குமாரின் பேச்சை உண்மை என்று நம்பி அந்த மாணவியும், தனது தாயாருக்கு போன் செய்து நகையை பெற்றுக் கொண்டதாக கூறி உள்ளார்.

சம்பவத்தன்று மாணவியை செல்போனில் தொடர்பு கொண்ட முத்துக்குமார், தனது வீட்டிற்கு வந்து அந்த நகையை பெற்றுச்செல்லும்படி கூறியுள்ளான். அவனது மனைவி வேலைக்கு சென்று விட, மகள்கள் இருவரும் பள்ளிக்கூடத்திற்கு சென்று விட வீட்டில் முத்துக்குமார் மட்டும் தனியாக இருந்துள்ளான். தங்களது நகை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வீடு தேடிச்சென்ற மாணவியை வீட்டிற்குள் அடைத்து வைத்து அத்துமீறலில் ஈடுபட்டுள்ளான் முத்துக்குமார்.

அபயக்குரல் எழுப்பிய மாணவியின் சத்தம் வெளியில் கேட்காமல் இருப்பதற்காக வாயில் துணியை திணித்து மிக கொடுமையாக சித்ரவதை செய்துள்ளான். இறுதியில் துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக போலீசுக்கு அளித்துள்ள வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளான் கொடூரன் முத்துக்குமார்.

இந்த சம்பவம் அனைத்தும் பட்டப்பகலில் நடைபெற்ற நிலையில் வீட்டிற்கு யாராவது வருவதற்கு முன்பாக மாணவியின் சடலத்தை மறைக்க வேண்டும் என்பதற்காக அந்த மாணவியின் சடலத்தின் கைகால்களை கட்டி பஞ்சு மூட்டை போல வாகனத்தில் எடுத்துச்சென்று ஊருக்கு ஒதுக்கு புறமாக வீசிச்சென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதற்கிடையே மாணவி மாயமானது குறித்து அவரது தாயிடம், காதலன் முத்துக்குமார் தெரிவித்த போது,.. தான் கொடுத்த நகையை வாங்கி கொண்டு அவள் வேறு யாராவதுடன் ஓடியிருப்பாள் என்று மாணவி பற்றி தவறாக கூறியதோடு, போலீஸ் நிலையத்திற்கு தாயுடன் சென்று புகாரும் கொடுத்து தேடுவது போல நாடகமாடியது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது..

தாயின் தவறான பழக்கத்தால் எந்த தப்பும் செய்யாத மாணவி கொடூரமாக கொல்லப்பட்ட விபரீதம் அரங்கேறி இருப்பது குறிப்பிடதக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments