கோவோவாக்ஸ் தடுப்பூசிக்கான அவசர கால பயன்பாட்டிற்கு WHO அனுமதி
சீரம் நிறுவனம் தயாரிக்கும் கோவோவாக்ஸ் (Covovax) கொரோனா தடுப்பூசியின் அவசர கால பயன்பாட்டிற்கு உலக சுகாதார அமைப்பு அனுமதி அளித்துள்ளது.
இது தொடர்பாக தெரிவித்த அந்த அமைப்பு, புதிய தடுப்பூசிக்கான ஒப்புதல், குறைந்த வருவாய் கொண்ட நாடுகளில் அதிக மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் முயற்சிக்கு ஊக்கம் தரும் என குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த நோவாவாக்ஸ் நிறுவனத்தின் கோவோவாக்ஸ் தடுப்பூசியை, குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் நாடுகளுக்கு விநியோகிப்பதற்கு சீரம் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. 2 டோஸ் தடுப்பூசியான கோவோவாக்சை 2 முதல் 8 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் சேமித்து வைக்கலாம்.
3 வயதிற்கு மேற்பட்டோரிடம் பரிசோதித்தபோது இந்த தடுப்பூசி நல்ல பலன் தருவதாகவும், 6 மாதங்களில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அண்மையில் சீரம் நிறுவன சிஇஓ அடார் பூனாவாலா அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Comments