மும்பை - புனே விரைவு நெடுஞ்சாலைத் திட்டத்துக்கு ரிலையன்ஸ் டெண்டரை நிராகரித்ததால் ரூ. 2000 கோடி சேமிப்பு ; மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

0 3767
மும்பை - புனே விரைவு நெடுஞ்சாலைத் திட்டத்துக்கு ரிலையன்ஸ் டெண்டரை நிராகரித்ததால் ரூ. 2000 கோடி சேமிப்பு

1995ஆம் ஆண்டில் மும்பை - புனே விரைவு நெடுஞ்சாலைத் திட்டத்துக்கு ரிலையன்ஸ் நிறுவனத்தின் டெண்டரை நிராகரித்து மாநில அரசு நிறுவனத்தின் மூலம் செயல்படுத்தியதால் இரண்டாயிரம் கோடி ரூபாயை மிச்சப்படுத்தியதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

நெடுஞ்சாலை, போக்குவரத்துத் திட்டங்களில் உள்ள முதலீட்டு வாய்ப்புக்கள் குறித்த தேசிய அளவிலான மாநாட்டில் நிதின் கட்கரி பங்கேற்றுப் பேசினார். தான் மகாராஷ்டிர மாநில அமைச்சராக இருந்தபோது மும்பை - புனே விரைவு நெடுஞ்சாலைத் திட்டத்தை நிறைவேற்ற ரிலையன்ஸ் நிறுவனம் 3600 கோடி ரூபாய்க்கு அளித்திருந்த டெண்டரை நிராகரித்ததாகத் தெரிவித்தார்.

இதனால் திருபாய் அம்பானி, அப்போதைய முதலமைச்சர் மனோகர் ஜோசி, பால்தாக்கரே ஆகியோர் தன் மீது அதிருப்தி அடைந்ததாகவும் தெரிவித்தார். அதே நேரத்தில், மகாராஷ்டிரச் சாலை மேம்பாட்டுக் கழகத்தைத் தொடங்கி அதற்கான முதலீட்டைப் பெற்று 1600 கோடி ரூபாய் செலவில் அந்தத் திட்டத்தை நிறைவேற்றி இரண்டாயிரம் கோடி ரூபாயை மிச்சப்படுத்தியதாகக் குறிப்பிட்டார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments