முந்திரிபருப்பு கண்டெய்னர் கடத்தப்பட்ட வழக்கு ; அதிமுக முன்னாள் அமைச்சரின் மகன் உட்பட 4 பேர் மீதும் பாய்ந்தது குண்டர் தடுப்புச் சட்டம்
தூத்துக்குடியில் ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான முந்திரிபருப்பு கண்டெய்னர் லாரியை கடத்திய வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியனின் மகன் ஜெபசிங்குக்கு உடந்தையாக செயல்பட்ட 4 பேர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்துள்ளது.
கடந்த மாதம் 26ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து தூத்துக்குடி துறைமுகம் நோக்கி 16 டன் முந்திரிப் பருப்புடன் வந்த கண்டெய்னர் லாரியை கடத்திச் சென்றதாக அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லபாண்டியனின் மகன் ஜெபசிங் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
வியாழக்கிழமை ஜெபசிங்கை குண்டர் தடுப்புச் சட்டத்தில் போலீசார் கைது செய்த நிலையில், வழக்குகளின் தன்மை அடிப்படையில் அவருடைய கூட்டாளிகள் 4 பேரும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
Comments