சாத்தான்குளம் தந்தை, மகன் படுகொலை வழக்கு விசாரணை முடிக்க 5 மாத கால கூடுதல் அவகாசம்..

0 3178
சாத்தான்குளம் தந்தை, மகன் படுகொலை தொடர்பான வழக்கை விசாரித்து முடிக்க 5 மாத கால கூடுதல் அவகாசம் வழங்கி கீழமை நீதிமன்றத்திற்கு உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

சாத்தான்குளம் தந்தை, மகன் படுகொலை தொடர்பான வழக்கை விசாரித்து முடிக்க 5 மாத கால கூடுதல் அவகாசம் வழங்கி கீழமை நீதிமன்றத்திற்கு உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணையை விரைவாக முடிக்கக்கோரி ஜெயராஜின் மனைவி செல்வராணி வழக்கு தொடர்ந்தார்.

இதனை அடுத்து விசாரணையை 6 மாதத்தில் முடிக்க உத்தரவிடப்பட்ட நிலையில், கால அவகாசம் கோரி மதுரை மாவட்ட நீதிமன்றம் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அந்த வழக்கு விசாரணையின் போது, இதுவரை 20 சாட்சிகள் மட்டுமே விசாரிக்கப்பட்டுள்ளதால் அவகாசம் தேவை என கீழமை நீதிமன்றம் கோரியதை பதிவு செய்த நீதிபதி, 5 மாதத்திற்குள்ளாக விசாரணையை முடிக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments