வேலை வாங்கித் தருவதாக பணமோசடி.. ராஜேந்திர பாலாஜியைப் பிடிக்க 4 தனிப்படைகள் அமைப்பு..

0 6226
ஆவின் உள்ளிட்ட நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணமோசடி செய்தது தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியைப் பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஆவின் உள்ளிட்ட நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணமோசடி செய்தது தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியைப் பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஆவின் நிறுவனத்தில் மேலாளர் வேலை வாங்கி தருவதாக கூறி சாத்துரை சேர்ந்த ரவீந்திரன் என்பவரிடம் 30 லட்சம் ரூபாயும் விஜய நல்லதம்பி என்பவரிடம் 3 கோடி ரூபாயும் பெற்று மோசடி செய்ததாக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, அவரது உதவியாளர்கள்  முத்துப்பாண்டி, பாபுராஜ், பலராமன் ஆகியோர் மீது விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் 5 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

அதனைத் தொடர்ந்து முன் ஜாமீன் கோரி ராஜேந்திர பாலாஜி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோரைப் பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments