சிலியை ஆண்ட சர்வாதிகாரியின் மனைவி மரணம் : வீதியில் இறங்கி கொண்டாடிய பொது மக்கள்

0 4129

சிலியில் முன்னாள் அதிபர் அகஸ்டோ பினோஷெட் -ன் மனைவி இறந்ததை நூற்றுக்கணக்கானோர் சேர்ந்து கொண்டாடினர்.

1973-ல் நடந்த ராணுவ கிளர்ச்சியில் ஆட்சியை கைபற்றி 17 ஆண்டுகள் சர்வாதிகார ஆட்சி செய்த அகஸ்டோ பினோஷெட், கடந்த 2006-ஆம் ஆண்டில் இறந்த நிலையில், 99 வயதான அவரது மனைவி Lucia Hiriart இப்போது காலமாகியுள்ளார்.

சர்வாதிகாரி அகஸ்டோ பினோஷெட் -ஐ  அவரது மனைவி பின்னால் இருந்து இயக்கியதாக கருதப்படும் நிலையில், Santiago வீதிகளில் குவிந்த பொதுமக்கள், கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

அகஸ்டோ பினோஷெட்-ன் ஆட்சி காலத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டதாகவும் பல ஆயிரம் பேர் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments