கர்நாடகா சட்டப்பேரவையில் பாலியல் வன்கொடுமை குறித்து சர்ச்சை பேச்சு.. மன்னிப்பு கோரிய காங்கிரஸ் எம்.எல்.ஏ..

0 2889
கர்நாடகா சட்டப்பேரவையில் பாலியல் வன்கொடுமை குறித்து சர்ச்சை கருத்துக்களை கூறிய முன்னாள் சபாநாயகரும் காங்கிரஸ் எம்.எல்.ஏவுமான ரமேஷ் குமார், மன்னிப்பு கோரியுள்ளார்.

கர்நாடகா சட்டப்பேரவையில் பாலியல் வன்கொடுமை குறித்து சர்ச்சை கருத்துக்களை கூறிய முன்னாள் சபாநாயகரும் காங்கிரஸ் எம்.எல்.ஏவுமான ரமேஷ் குமார், மன்னிப்பு கோரியுள்ளார்.

சட்டப்பேரவையில் நேற்று பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, பாலியல் வன்கொடுமையை தவிர்க்க முடியவில்லை என்றால் அதை அனுபவிக்க வேண்டுமென ரமேஷ் குமார் கொச்சையாக கூறியதால் அவையில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.

இதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டுமென அவரது கட்சி உறுப்பினர்கள் உட்பட பலர் எதிர்ப்புக் குரலெழுப்பினர். இந்நிலையில், பேரவையில் பாலியல் வன்கொடுமை குறித்து தான் பேசியதற்கு மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் இனி கவனமாக பேசுவேன் என்றும் ரமேஷ் குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments