சாத்தான்குளம் வழக்கில் திடீர் திருப்பம்.. ஜெயராஜ் - பென்னிக்ஸை போலீசார் அடித்து துன்புறுத்தி ஆவணங்களை மாற்றி பொய்வழக்கு பதிந்ததாக சிறப்பு சார்பு ஆய்வாளர் தகவல்

0 5441
ஜெயராஜ் - பென்னிக்ஸை சாத்தான்குளம் போலீசார் அடித்து துன்புறுத்தியதோடு, இருவரும் உயிரிழந்த பின்னர் ஆவணங்களையும் மாற்றி பொய் வழக்கு பதிந்ததாக சிறப்பு சார்பு ஆய்வாளர் ரவிச்சந்திரன் சாட்சியம் தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற குறுக்கு விசாரணையில், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணிபுரிந்த ரவிச்சந்திரன்,ஜெயராஜ், பென்னிக்ஸை சாத்தான்குளம் போலீசார் காவல் நிலையத்தில் வைத்து அடித்து துன்புறுத்தியதாகவும், இருவரும் உயிரிழந்தவுடன் ஆவணங்களை மாற்றிய பொய் வழக்கை பதிவு செய்ததாக சாட்சியம் அளித்துள்ளார்.

ஏற்கனவே அதே காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்த ரேவதி தந்தை, மகன் இருவரையும் துன்புறுத்தியதாக, சாட்சியம் அளித்திருந்த நிலையில், மேலும் ஒருவர் அதே கருத்தை சாட்சியமாக கூறியிருப்பது வழக்கில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இதனையடுத்து, வழக்கின் அடுத்தகட்ட விசாரணை 21ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments