வடகிழக்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
வடகிழக்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், அடுத்த இரண்டு நாட்களுக்கு தென் கடலோரம் மற்றும் டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டையில் மிதமான மழை பெய்யக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது. ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் எனவும், 19-ந் தேதி வட கடலோர மாவட்டங்களில் மட்டும் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இரு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். குமரிக்கடல் பகுதியில் மணிக்கு 45 கிலோ மீட்டர் வேகம் வரையில் காற்று வீசக்கூடும் என்பதால் அங்கு செல்லும் மீனவர்கள் 4 நாட்களுக்கு எச்சரிக்கையுடன் சென்று வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Comments