கொரோனா பரவலால், உலக அழகிப்போட்டி ஒத்திவைப்பு !

0 2426

போட்டியாளர்கள் பலருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதை அடுத்து இந்த ஆண்டிற்கான உலக அழகிப்போட்டி தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புயெர்டோ ரிகோ (Puerto Rico) தீவில் உலக அழகியை தேர்வு செய்யும் இறுதிப்போட்டி நடைபெறவிருந்த நிலையில், இந்தியா சார்பில் பங்கேற்ற மானசா வாரணாசி (Manasa Varanasi)  உள்ளிட்ட போட்டியாளர்கள் மற்றும் ஊழியர்கள் என 17 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது.

இதனை அடுத்து போட்டி தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், அடுத்த 3 மாதங்களுக்குள் போட்டி நடத்தப்படும் என தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments