தேர்தலின்போது திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரி தமிழகம் முழுவதும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்
விலைவாசியைக் கட்டுப்படுத்தக் கோரியும், தேர்தலின்போது திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரியும் தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தேனியில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலும், நாமக்கல்லில் முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமையிலும், கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை ராயபுரத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Comments