விமானி வருண் சிங்கின் உடலுக்கு மத்தியப் பிரதேச முதலமைச்சர் மலர் வளையம் வைத்து மரியாதை
ஹெலிகாப்டர் விபத்தில் காயமடைந்து உயிரிழந்த விமானப்படை விமானி வருண் சிங்கின் உடல் போபாலில் ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் தீக்காயமடைந்த விமானி வருண் சிங் பெங்களூர் மருத்துவமனையில் சிகிச்சை பயனின்றிப் புதனன்று உயிரிழந்தார். இதையடுத்து அவர் உடல் மத்தியப் பிரதேசத்தின் போபாலில் உள்ள அவர் வீட்டுக்குக் கொண்டுவரப்பட்டது. குடும்பத்தினர் மரியாதை செலுத்திய பின் அவர் உடல் ராணுவ வாகனத்தில் தகனக் கூடத்துக்கு ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டது.
அங்கு அவர் உடலுக்கு முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், ராணுவ அதிகாரிகள் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். அதன்பின் குடும்பத்தினரின் இறுதிச் சடங்குகளுக்குப் பின் உடல் ராணுவ மரியாதையுடன் எரியூட்டப்பட்டது.
Comments