தமிழ்த்தாய் வாழ்த்து தமிழ்நாடு அரசின் மாநில பாடலாக அறிவிப்பு

0 3409
தமிழ்த்தாய் வாழ்த்தை தமிழ்நாடு அரசின் மாநில பாடலாக அறிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

தமிழ்த்தாய் வாழ்த்தை தமிழ்நாடு அரசின் மாநில பாடலாக அறிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணையில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடப்படும்போது தவறாமல் எழுந்து நிற்க வேண்டும் என்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு எழுந்து நிற்பதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து பொது அமைப்பு நிறுவனங்களிலும், நிகழ்வு துவங்குவதற்கு முன் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாட வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.

மேலும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை வாய்ப்பாட்டாக பாட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments