டெல்லியில் மேலும் 10 பேருக்கு ஒமிக்ரான் உறுதி
தலைநகர் டெல்லியில் மேலும் 10 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், நாட்டில் மொத்தமாக புதிய வகை தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 96ஆக உயர்ந்துள்ளது.
டெல்லியில் மேலும் 10 பேருக்கு ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இங்கு மொத்த ஒமிக்ரான் பாதிப்பு 20ஆக உயர்ந்திருப்பதாகவும் டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்தியேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார்.
ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரில் 10பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Comments