வடமாநிலங்களில் மக்களை வாட்டி வதைக்கும் கடுங்குளிர்!
பஞ்சாப், டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் நிலவும் கடுங்குளிர் மக்களை வாட்டி வதைக்கிறது.
வட இந்தியாவில் குளிர்காலம் தொடங்கியிருக்கும் நிலையில் உத்தர பிரதேசம், டெல்லி, உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் கடுங்குளிர் நிலவுகிறது. பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் இன்று காலை வெப்பநிலை குறைந்து கடுங்குளிர் நிலவியதால், மக்கள் நெருப்பு மூட்டி குளிர் காய்ந்தனர்.
இதே போன்று, டெல்லி அக்சார்தாம் பகுதியில் நிலவிய கடும் பனிமூட்டத்தால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதோடு, மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத சூழல் நிலவியது. ஏற்கனவே டெல்லியில் காற்றின் தரம் மிக மோசமாக நிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
Comments