என்னையை மீறி எங்கேயும் போகக் கூடாது … கன்றுக்குட்டிக்கு செக்மேட் வைத்த நாய்குட்டி!

0 18449

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே கயிற்றை அவிழ்த்துக் கொண்டு சுற்றித்திரிந்த கன்றுக்குட்டியை, நாய் குட்டி ஒன்று கயிறை விடாமல் வாயால் பிடித்து வைத்துக் கொண்டு விளையாட்டுக் காட்டிய வீடியோ அப்பகுதியில் வைரலாகி வருகிறது.

சிக்கரசம்பாளையம் பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தனது வீட்டில் மாடுகளை வளர்த்து வருகிறார். இரவு நேரத்தில் கயிற்றை அவிழ்த்துக் கொண்டு கன்றுக்குட்டி ஒன்று அங்கும் இங்கும் சுற்றித்திரிந்துள்ளது.

இதனை பார்த்த அந்த விவசாயி தாம் வளர்க்கும் நாய் குட்டியிடம் கயிற்றை பிடித்து கன்றுக்குட்டியை இழுத்து வா என கூறியிருக்கிறார். உடனடியாக அந்த நாய்க்குட்டி எதிரி யார், அவனது பலம் என்ன என சற்றும் யோசிக்காமல், கயிற்றை தனது வாயால் கவ்விக் கொண்டு வெகு நேரமாக கன்றுகுட்டியை இருந்த இடத்தை விட்டு நகரவிடாமல் பிடித்திருந்தது.

பின்னர், அந்த பக்கமாக செல்ல முயன்ற கன்றுக்குட்டியை தனது முழு பலத்தையும் பிரயோகித்து நாய்க்குட்டி பிடித்து இழுத்தது அதன் விடாமுயற்சியை சுட்டிக்காட்டியது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments