ஓலா எலெக்ட்ரிக் S1, S1 pro மாடல்கள் டெலிவரி ஆரம்பம்

0 3897

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் S1 ரக மின்சார ஸ்கூட்டர்களை முதற்கட்ட வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம் டெலிவரி செய்துள்ளது.

ஓசூரில் உள்ள அந்நிறுவனத்தின் உற்பத்தி வளாகத்தில் வாடிக்கையாளர்களுக்கு ஸ்கூட்டர்கள்  வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சி குறித்து டிவிட்டரில் பதிவு போட்டுள்ள அந்நிறுவனத்தின் தலைவர் பவிஷ் அகர்வால், சரியாக 11 மாதங்களில் உலகத் தரம் வாய்ந்த ஆலையை அமைத்து ,கோவிட் கட்டுபாடுகள் மற்றும் மூலப் பொருட்கள் பற்றாக்குறைக்கு மத்தியில் வாடிகையாளர்களுக்கு டெலிவரி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

S1 மாடல் 99 ஆயிரத்து 999 ரூபாய்க்கும், S1 pro மாடல் 1 லட்சத்து 29 ஆயிரத்து 999 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும் நிலையில், அந்தந்த மாநில அரசுகள் வழங்கும் மின்சார வாகன மானியத்தின் அடிப்படையில் விலை மாறுபடும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments