வாகன ஆவணங்களின் செல்லுபடி காலம் டிசம்பர் 31-ம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு அரசாணை!

0 3368

கொரோனா காரணமாக, ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவு உள்ளிட்ட அனைத்து வாகன ஆவணங்களின் செல்லுபடி காலம் டிசம்பர் 31-ம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

பொது போக்குவரத்திற்கான தகுதி சான்று புதுப்பித்தல், அனுமதிச்சீட்டு, ஓட்டுநர் உரிமம், வாகனப்பதிவு ஆகியவை செல்லுபடியாகும் காலத்தை ஏற்கனவே அக்டோபர் 31ம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இருப்பினும், டெல்லி, மேற்கு வங்கம் மாநிலங்களில் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது போல், தமிழகத்திலும் டிசம்பர் 31ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்து தருமாறு, தமிழக அரசுக்கு கோரிக்கைகள் வைக்கப்பட்டன.

அதன் அடிப்படையில், கொரோனா நோய் தொற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளை கருத்தில் கொண்டு, தகுதி சான்று புதுப்பித்தல், அனுமதிச்சீட்டு, ஓட்டுநர் உரிமம், வாகனப்பதிவு உள்ளிட்ட அனைத்து வாகன ஆவணங்களின் செல்லுபடி கால அளவினை டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், இதுவே கடைசி கால அவகாச நீட்டிப்பாக இருக்கும் என்ற நிபந்தனையுடன் ஆணையிடப்படுவதாக அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments