ஹைதி சூப்பிற்கு சர்வதேச கலாசார பட்டியலில் அங்கீகாரம் வழங்கிய யுனெஸ்கோ!
ஹைதி நாட்டின் சுதந்திரத்தை குறிக்கும் சூப்பை மனிதகுல கலாசார பாரம்பரிய பட்டியலில் இணைத்து, ஐக்கிய நாடுகளின் கல்வி அறிவியல் கலாசார அமைப்பான யுனெஸ்கோ அங்கீகாரம் வழங்கி உள்ளது.
பூசணிக்காயை பிரதானமாக கொண்டு, காய்கறிகள், இறைச்சி, பாஸ்தா, மசாலாக்கள் கொண்டு தயாரிக்கப்படும் சூப், அடிமைத்தனம், காலனித்துவம், இனவெறியில் இருந்து தங்களை விடுவித்த சுதந்திரத்திதற்கான அடையாளம் என ஹைதி தூதர் தெரிவித்துள்ளார்.
மேலும் பிரான்சிடம் இருந்து சுதந்திரம் மற்றும் சூப்பின் உரிமையை பெற்றது தங்களின் கவுரவம், மற்றும் கண்ணியத்தை குறிப்பதாக தெரிவித்தார்.
Comments