புனித தலங்களுக்கு செல்ல சிறப்பு ரயில் சுற்றுலா திட்டங்கள் - IRCTC

0 2755

ஆந்திராவில் புனித தலங்களுக்குப் பயணிக்கும் பக்தர்களுக்கு சிறப்பு சுற்றுலா திட்டங்களை IRCTC அறிமுகம் செய்துள்ளது. ஜனவரி, பிப்ரவரி, மார்ச் ஆகிய மாதங்களுக்கு மூன்று புதிய சுற்றுலா திட்டங்கள் அறிமுகம் செய்யப்படும் என்று விஜயவாடாவில் செய்தியாளர்களிடம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜனவரி 21 முதல் 31 வரையிலான முதல் சுற்றுலா திட்டத்தில் குஜராத் புனிதத் தலங்களுக்கு செல்ல ரயில்கள் இயக்கப்படும். சோம்நாத், துவாரகா, அகமதாபாத், சர்தார் பட்டேலின் ஒற்றுமை சிலை  உள்ளிட்ட இடங்களுக்கு ரயில் மூலம் சுற்றுலா செல்லலாம். இதற்கான உணவு, படுக்கை வசதியுடன் கட்டணம் 10 ஆயிரமாகவும் 3 வது ஏசி கட்டணம் 17 ஆயிரமாகவும் இருக்கும்.

இதே போன்று பாரத தரிசனம் என்று மற்றொரு சுற்றுலா திட்டம் அறிமுகம் செய்யப்படுகிறது.மதுரா, ஆக்ரா, ஹரிதுவார்,வைஷ்ணவ தேவி கோவிலுக்கு இதில் சுற்றுலா செல்ல முடியும். இது தவிர திருப்பதி உள்ளிட்ட தலங்களுக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments