லதா மங்கேஷ்கர் பாடத் தொடங்கி 80 ஆண்டுகள் பூர்த்தி

0 5364

இந்தி திரையுலகில் முடிசூடா அரசியாக விளங்கும் பாடகி லதா மங்கேஷ்கர் வானொலியில் முதல் பாடலைப் பாடி நேற்றுடன் பின்னணி பாடகராக 80 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.

தற்போது 92 வயதாகும் லதா மங்கேஷ்கர் தலைமுறைகளைக் கடந்து பல ஆயிரம் திரைப்படப் பாடல்களைப் பாடி ரசிகர்கள் உள்ளங்களில் நீங்காத இடம் பிடித்துள்ளார்.

இது குறித்து டிவிட்டரில் தமது இளமைக்கால படத்துடன் பதிவு ஒன்றை போட்டுள்ள லதா மங்கேஷ்கர் முதல் முறையாக இதே நாளில் இரண்டு பாடல்களுடன் அடியெடுத்து வைத்து 80 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments