ஷீனா போரா உயிருடன் இருக்கிறாரா? சிபிஐ நீதிமன்றத்திற்கு ஷீனாவின் தாய் இந்திராணி முகர்ஜி பரபரப்பு வாக்குமூலம்!
ஷீனா போரா உயிருடன் இருப்பதாகவும் காஷ்மீரில் தேடினால் அவர் கிடைப்பார் என்றும் ஷீனா போராவை கழுத்தை நெரித்துக் கொன்ற வழக்கில் கைதான இந்திராணி முகர்ஜி பரபரப்பான வாக்குமூலம் அளித்துள்ளார்.
இப்பிரச்சினை தொடர்பாக சிபிஐ நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய இருப்பதாகவும் இந்திராணியின் வழக்கறிஞர் சனா ரயீஸ் கான் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். சிபிஐக்கு இந்திராணி எழுதியுள்ள கடிதத்தில் யாரைக் கொன்றதாக தம் மீது வழக்குத் தொடரப்பட்டிருக்கிறதோ அந்த ஷீனா போரா உயிருடன்தான் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
தாம் அடைக்கப்பட்டுள்ள மும்பை பைகுல்லா சிறையின் பெண் அதிகாரி ஒருவர் ஷீனாவை காஷ்மீரில் பார்த்ததாக கூறியிருப்பதாகவும் இந்திராணி தெரிவித்துள்ளார்.
சொந்த மகளான ஷீனா போராவையே கொன்று உடலை எரித்ததாக இந்திராணி கைது செய்யப்பட்டார். போலீசார் ஷீனாபோராவின் எஞ்சிய உடல் பாகங்களையும் மீட்டனர். இவ்வழக்கில் இந்திராணியின் கணவர் பீட்டர் முகர்ஜியா உள்பட மேலும் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்
Comments