இஸ்ரோவின் எஸ்எஸ்எல்வி செயற்கை கோள் அடுத்தாண்டு தொடக்கத்தில் ஏவப்படும் - மத்திய அரசு

0 2247

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் உருவாக்கி வரும் எஸ்எஸ்எல்வி அடுத்தாண்டு தொடக்கத்தில் விண்ணில் செலுத்தப்படவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மாநிலங்களவையில் இஸ்ரோ தயாரித்து வரும் செயற்கைக்கோள் குறித்த கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், தனியார் பங்களிப்புடன் இஸ்ரோ தயாரித்து வரும் செயற்கைக்கோளை ஏவும் எஸ்எஸ்எல்வி திட்டமானது அடுத்தாண்டு நிறைவு பெற்று முதல் காலாண்டில் விண்ணில் செலுத்தப்படும் என்றார். 

சுமார் 500 கிலோ எடையை சுமக்கும் திறன் கொண்ட இந்த எஸ்எஸ்எல்வி திட்டத்திற்காக 169 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியுள்ளதாகவும் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments