சூட்கேஸ் அளவில் குட்டி ஸ்கூட்டர்.. பலூன் போல் காற்றடைத்து பயன்படுத்தலாம்..!

0 7992
காற்றடைத்து ஓட்டிச் செல்லும் புதிய வகை குட்டி ஸ்கூட்டர்களை ஜப்பானில் உருவாக்கியுள்ளனர்.

காற்றடைத்து ஓட்டிச் செல்லும் புதிய வகை குட்டி ஸ்கூட்டர்களை ஜப்பானில் உருவாக்கியுள்ளனர்.

பொய்மோ (POIMO) என பெயர் சூட்டப்பட்டுள்ள அந்த ஸ்கூட்டரை, டோக்கியோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஹிரோகி சட்டோ என்பவர் உருவாக்கியுள்ளார்.

சூட்கேஸ் சைசில் உள்ள இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை, எளிதாக எங்கு வேண்டுமானாலும் கைகளிலேயே தூக்கிச் செல்லலாம். தேவைப்படும் இடத்தில் பலூனுக்கு காற்றடைப்பது போல் அடைத்து பயன்படுத்தலாம்.

தற்போதைக்கு மணிக்கு 15 கிலோ மீட்டர் வேகத்தில், சுமார் ஒன்றரை மணி நேரம் தொடர்ந்து பயன்படுத்தும் வகையில், இந்த சூட்கேஸ் ஸ்கூட்டர் வடிவமைக்கப்பட்டுள்து.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments