சென்னையில் மைக்ரோசாஃப்ட் பெயரை பயன்படுத்தி மோசடி.. சிபிசிஐடி அதிரடி சோதனை..!
சென்னையில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி போலி கால் சென்டர் நடத்தி வரும் மோசடி கும்பல் மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
போலி கால் சென்டர் அல்லது இமெயில் மூலமாக அணுகும் கும்பல், குறைந்த விலையில் உரிமம் பெற்ற மைக்ரோசாப்ஃட் மென்பொருட்களை தருவதாகக்கூறி விற்பனையில் ஈடுபட்டு, அதனை கணினியில் தரவிறக்கம் செய்ய வைக்கின்றனர்.
இதனை அடுத்து, அந்த மென்பொருள் மூலம் கணினிகளை தாக்கும் வைரஸ்களை பதிவிறக்கி தரவுகள் திருடப்படுவதாகவும், அதனை திருப்பித்தர பணம் அல்லது டாலர்களாக கேட்டு மிரட்டுவதாகவும் புகார்கள் எழுந்தன.
இந்நிலையில், இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் சிபிசிஐடி சைபர் கிரைம் பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில், போலி கால் சென்டர் நடத்தும் இடங்களை அடையாளம் கண்டு சுமார் 10 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.
Comments