"வூகான் ஆய்வகத்தில் இருந்தே கொரோனா பரவியிருக்கலாம்”- கனடா பெண் விஞ்ஞானி

0 4000
சீனாவின் வூகான் ஆய்வகத்தில் இருந்தே கொரோனா வைரஸ் பரவியிருக்கலாம் என கனடாவை சேர்ந்த பிரபல நுண்ணுயிரியல் விஞ்ஞானி அலினா சென் தெரிவித்துள்ளார்.

சீனாவின் வூகான் ஆய்வகத்தில் இருந்தே கொரோனா வைரஸ் பரவியிருக்கலாம் என கனடாவை சேர்ந்த பிரபல நுண்ணுயிரியல் விஞ்ஞானி அலினா சென் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைகளுக்கான குழுவை சேர்ந்த எம்.பி.,க்களிடையே பேசுகையில், அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும், இது வூகான் பகுதியில் உள்ள விலங்குகள் சந்தையில் இருந்து இயற்கையாக பரவவில்லை என்றும், அங்குள்ள ஆய்வகத்தில் உயிரி பொறியியல் மூலம் செயற்கையாக உருவாக்கப்பட்டு பரவியிருக்க வாய்ப்புள்ளது என்றும், அலினா சென் விளக்கம் அளித்துள்ளார்.

கொரோனா வைரஸை சீனா பரப்பியதாக பல நாடுகள் சந்தேகம் எழுப்பும் நிலையில், விஞ்ஞானி அலினா சென்னின் கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments