ஹெலிகாப்டர் விபத்தில் பிரதமர் மோடியை தொடர்புப்படுத்தி கார்ட்டூன் வெளியிட்ட நபர் வழக்குப்பதிவு

0 2676

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் பிரதமர் நரேந்திர மோடியை தொடர்புபடுத்தி கார்ட்டூன் வெளியிட்ட நபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

நான் தான் பாலா என்ற முகநூல் பக்கத்தில், ஹெலிகாப்டர் விபத்தில் பிரதமர் மோடியை தொடர்புப்படுத்தி தவறாக விமர்சித்து செய்தி மற்றும் கார்ட்டூன் வெளியிடப்பட்டிருந்தது.  

சம்பந்தப்பட்ட முகநூல் கணக்கு வாடிக்கையாளர் மீது பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது, தீய எண்ணத்தோடு செயல்படுதல், சாதி, மத, இனம், மொழி சம்பந்தமான உணர்ச்சிகளை தூண்டுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும், குறிப்பிட்ட கார்ட்டூனையும் போலீசார் நீக்கியுள்ளனர். இதனிடையே, ஹெலிகாப்டர் விபத்து குறித்து அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் மாநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments