டெல்டா மாவட்டங்களில் இரு நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் - வானிலை ஆய்வு மையம்

0 4934

வடகிழக்கு பருவக்காற்று காரணமாக, தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த இரு நாட்களுக்கு ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களில் மிதமான மழையும், 18,19ஆகிய தேதிகளில் தென் மாவட்டங்களின் கடலோர பகுதிகளில் லேசான மழையும் பெய்யக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது. சென்னையில் இரு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

குமரிக்கடல் பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் 5 நாட்களுக்கு அங்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தென் மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகை பகுதியில் நாளைய தினம் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments