கலிபோர்னியாவை புரட்டிப் போட்ட புயல்: வரும் நாட்களில் கன மழைக்கு வாய்ப்பு என தேசிய வானிலை மையம் எச்சரிக்கை
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை தாக்கிய புயலால் கனமழை கொட்டித் தீர்த்து பல்வேறு பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டு குடியிருப்புகள் உருக்குலைந்தன. அடுத்த வரும் நாட்களில் கலிபோர்னியா, நெவடா உள்ளிட்ட பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தேசிய வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது.
சில்வேரடோ, மோட்ஜெஸ்கா, உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்டுள்ள நிலச் சரிவுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடந்து வருவதாகவும், நிலச் சரிவால் போக்குவரத்து துண்டிக்கப்பட்ட பகுதிகளில் மீண்டும் சாலை அமைக்கும் பணி நடந்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Comments