முப்படைகளுக்குப் புதிய தலைமைத் தளபதி தேர்வு செய்ய மத்திய அரசு தீவிரம் -அமைச்சர் ராஜ்நாத்சிங்
முப்படை தலைமைத் தளபதியைத் தேர்வு செய்ய மத்திய அரசு தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் 13 பேர் உயிரிழந்ததையடுத்து, பிபின் ராவத் பொறுப்புக்கு புதிய ராணுவ அதிகாரியை நியமிக்கும் வரை முப்படைத் தளபதிகள் தனித்தனியாக இயங்கும் பழைய முறையே தொடரும் என்றும் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.
ராணுவ சீர்திருத்தங்கள் தொடரவும் முப்படைகள் இணைந்து செயல்படவும் புதிய முப்படைத் தலைமைத் தளபதியை நியமிக்க அரசு திட்டமிட்டுள்ளது.
பிபின் ராவத் மறைவுக்குப் பிறகு எம்.எம். நரவனே இந்த நாட்டின் மிக மூத்த ராணுவ அதிகாரியாக இருப்பதால் அவர் மீது அனைவரின் கவனமும் திரும்பியுள்ளது.
Comments