வங்கி ஊழியர்கள் இன்றும் நாளையும் வேலை நிறுத்தம்

0 3801

இன்றும் நாளையும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

இதனால் வங்கி மற்றும் ஏடிஎம் சேவைகள் பாதிக்கப்படலாம்.மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021-22ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கலின்போது நடப்பு நிதி ஆண்டில் இரண்டு பொதுத் துறை வங்கிகள் தனியார் மயமாக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

வங்கி திருத்தம் சட்ட மசோதா அதற்கு வழிவகுக்கும் வகையில் இருப்பதால், இந்த மசோதாவை ரத்து செய்யவும், பொதுத் துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் முயற்சியைக் கைவிட வேண்டும் என்றும் வங்கி ஊழியர்கள் சங்கங்கள் போராட்டம் நடத்துகின்றன.

பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ, வாடிக்கையாளர் நலன் கருதி வேலை நிறுத்தத்தில் ஈடுபட வேண்டாம் என ஊழியர்களை கேட்டுக்கொண்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments