புதுச்சேரியில் கொரோனா ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி

0 2411
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி

புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய கொரோனா ஊரடங்கு ஜனவரி 2-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி 24 மற்றும் 25-ம் தேதிகளில் இரவு நேர ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல் புத்தாண்டையொட்டியும் டிசம்பர் 31, ஜனவரி 1 மற்றும் 2-ம் தேதிகளில் இரவு நேர ஊரடங்கில் தளர்வுகள் அறிவிப்பப்பட்டுள்ளன.

புத்தாண்டை முன்னனிட்டு கலால் துறையிடம் அனுமதி பெற்று இரவில் கூடுதல் நேரம் மதுபான கடைகளை திறக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments