கால்பந்து மைதானத்தில் 19 ஆயிரம் கரடி பொம்மைகளை வீசிய ரசிகர்கள்
ஸ்பெயினில் நடந்த உள்ளூர் கால்பந்து போட்டி ஒன்றில், போட்டியின் இடைவேளையின் போது ஆயிரக்கணக்கான கரடி பொம்மைகள் ரசிகர்களால் மைதானத்தில் வீசப்பட்டன.
Real Betis அணிக்கும் Real Sociedad அணிக்கும் நடந்த போட்டியில் வெற்றி பெற்ற Real Betis அணியின் ஆதரவாளர்கள் சுமார் 19 ஆயிரம் கரடி பொம்மைகளை வீசினர்.
அந்நாட்டில் ஆண்டு தோறும் டிசம்பர் மாதம் நடைபெறும் கடைசி கால்பந்து போட்டியின் போது ரசிகர்கள் பொம்மைகளை வீசுவது வழக்கம்.
கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது ஸ்பெயினின் ஆதரவற்ற குழந்தைகளுக்கு பரிசு கிடைக்காமல் போகக் கூடாது என்ற நோக்கத்தில் பொம்மைகள் வீசப்படுகின்றன.
Comments