பாஜக ஆளும் முதலமைச்சர்கள் அயாத்தியில் சாமி தரிசனம்

0 2692
பாஜக ஆளும் முதலமைச்சர்கள் அயாத்தியில் சாமி தரிசனம்

பாஜக ஆளும் முதலமைச்சர்கள், அயோத்தி ராமஜென்ம பூமியிலுள்ள கோயிலில் தரிசனம் செய்தனர்.

மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகான், கோவா முதலமைச்சர் பிரமோத் சவந்த், அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா, ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார், அருணாச்சலப் பிரதேச முதலமைச்சர் பெமா கண்டு, திரிபுரா முதலமைச்சர் பிப்லப் தேப், மணிப்பூர் முதலமைச்சர் பிரென் சிங் மற்றும் துணை முதலமைச்சர்கள், பாஜக தேசிய தலைவர் ஜே.பிநட்டா ஆகியோர் ராம் லல்லா மற்றும் அனுமன் கோயிலில் தரிசனம் செய்தனர். சரயு நதிக்கரையில் ஆரத்தி எடுத்தும் வழிபட்டனர்.

பின்னர் பேசிய முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகான், நாட்டின் வளர்ச்சிக்காகவும், அனைவரது ஆரோக்கியத்திற்காகவும் பிரார்த்தனை செய்ததாக தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments