லக்கிம்பூர் வன்முறை தொடர்பாக கேள்வி எழுப்பிய செய்தியாளரை சகட்டுமேனிக்கு வசைபாடிய மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா

0 2711

லக்கிம்பூர் வன்முறை தொடர்பாக கேள்வி எழுப்பிய செய்தியாளர்களை மத்திய அமைச்சர் அஜய் மிஷ்ரா, திட்டிய காட்சி வெளியாகியுள்ளது.

விவசாயிகள் போராட்டத்தில் காரை விட்டு மோதிய லக்கிம்பூர் வன்முறை தொடர்பாக மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஷ்ரா உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விவசாயிகள் கொல்லப்பட்ட சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்ட சதிச்செயல் என சிறப்பு புலனாய்வு பிரிவு லக்னோ நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், லக்கிம்பூரில் ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை திறந்து வைக்க வந்த மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவிடம் சிறப்பு புலனாய்வு பிரிவின் அறிக்கை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு செய்தியாளரை கடிந்துக் கொண்ட அமைச்சர், வசைபாடியதோடு, மைக்கை பறித்து தாக்க முற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments