வீட்டு அடமான கடன் வழங்குவதற்கு கூட்டுறவு வங்கி தலைவர் லஞ்சம் வாங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்
சேலம் மாவட்டம் ஆத்தூரில் வீட்டு அடமான கடன் வழங்குவதற்கு கூட்டுறவு வங்கி தலைவர் 3 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மண்மலை பாலக்காடு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் வீட்டை அடமானம் வைத்து கடன் வாங்கியுள்ள நிலையில், கடன் தொகையை அதிகரித்து தரக் கோரி ஆத்தூர் கூட்டுறவு நகர வங்கி தலைவர் ராமதாஸை அனுகியுள்ளார்.
இந்நிலையில், அவர் 7000 ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படும் நிலையில், அந்த பெண் 3 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளார். அப்போது ராமதாஸ் 7 ஆயிரம் ரூபாய் கேட்டதற்கு 3 ஆயிரம் ரூபாய் கொடுத்து இருக்கிறார் என்று அந்த பெண்ணிடம் வாக்குவாதம் செய்தார்.
இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என சேலம் மண்டல கூட்டுறவு இணைப் பதிவாளர் மலர்விழி தெரிவித்துள்ளார்.
Comments