டெல்டா மாவட்டங்கள், தென்மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்யக் கூடும் - வானிலை ஆய்வு மையம்
வடகிழக்குப் பருவக் காற்றால் இன்று டெல்டா மாவட்டங்கள், அதையொட்டிய உள்மாவட்டங்கள், தென்மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டிசம்பர் 16 முதல் 19 வரை தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. சென்னையில் இரு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
இன்று காலை எட்டரை மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் அதிக அளவாகப் பெரம்பலூர் மாவட்டம் அகரம் சீகூர், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஆகிய இடங்களில் 3 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. டிசம்பர் 17 அன்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாவதால், அப்பகுதியில் மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும், இதனால் அப்பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
Comments