ஆக்ஸ்போர்டு பல்கலை.யில் ஆராய்ச்சி வளாகம் கட்டப் பூனாவாலா குடும்பம் 502 கோடி நிதியுதவி!
ஆராய்ச்சி வளாகத்தைக் கட்டுவதற்காக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துக்கு 502 கோடி ரூபாய் தருவதாக சீரம் நிறுவனத்தின் உரிமையாளர்களான பூனாவாலா குடும்பம் உறுதியளித்துள்ளது.
பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், அஸ்ட்ராசெனேக்கா நிறுவனம் இணைந்து கண்டுபிடித்த கோவிஷீல்டு கொரோனா தடுப்பு மருந்தை இந்தியாவில் தயாரிக்கவும் விற்கவும் புனேயைச் சேர்ந்த சீரம் இன்ஸ்டிடியூட் உரிமம் பெற்றுள்ளது.
இந்நிலையில் ஆராய்ச்சி வளாகம் கட்டப் பூனாவாலா குடும்பம் நிதியுதவி செய்வதாகவும், இந்த வளாகத்துக்குப் பூனாவாலா குடும்பத்தினரின் பெயர் சூட்டப்படும் என்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
Comments