தடுப்பூசி செலுத்தாவிட்டால் பணி நீக்கம்: கூகுள் நிறுவனம் அதிரடி திட்டம் எனத் தகவல்!

0 2869

கொரோனா தடுப்பூசி விதிமுறைகளை பின்பற்றாத ஊழியர்களை பணிநீக்கம் செய்ய கூகுள் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக அந்நிறுவனம் தனது ஊழியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாகவும், அதன்படி தடுப்பூசி செலுத்தாத ஊழியர்கள், வரும் ஜனவரி 18-ம் தேதி முதல், 30 நாட்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பில் அனுப்பப்படுவார்கள் என்றும், அதன்பிறகு சம்பளம் இல்லாத விடுப்பில் 6 மாதங்களுக்கு வைக்கப்பட்டு, பின்னர் பணிநீக்கம் செய்யப்படுவார்கள், என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், மருத்துவ மற்றும் மதரீதியான காரணங்களுக்காக தடுப்பூசி செலுத்தாதவர்கள் முறையாக விண்ணப்பித்து விலக்கு பெறலாம் என்றும் கூகுள் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments