எல்லையில் மேலாதிக்கம் செலுத்தும் சீனாவின் சர்ச்சைக்குரிய புதிய சட்டம்
எல்லையில் மேலாதிக்கம் செலுத்தவும் எல்லையை விரிவாக்கம் செய்யவும் சீனா புதிய சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.
ஜனவரி 1 புத்தாண்டு முதல் இச்சட்டம் அமலுக்கு வருகிறது. லடாக் கிழக்கு எல்லையில் சீனா படைகளைக் குவித்து எல்லையின் விதிகளை மதிக்காத நிலையில் சீனாவின் சர்ச்சைக்குரிய இச்சட்டம் குறித்து இந்தியா மிகுந்த கவனத்துடன் கண்காணித்து வருகிறது.
தற்போது சீனா படைகளை நிறுத்தியுள்ள எல்லைப் பகுதிகளை சட்டரீதியாக சீனா உரிமை கோருமா என்பது தான் இப்போது மிகப்பெரிய கேள்வியாக எழுந்துள்ளது.எல்லைப்பகுதிகளில் புதிய கிராமங்களை உருவாக்கவும் , சீனா திட்டமிட்டுள்ளது.
Comments